T-140 3/4
கர்த்தரின் பெட்டகம் தோள்மேலே
கல்வாரி நாயகன் நமக்குள்ளே
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்
சொல்லிடுவோம் சுவிசேஷம்
1. யோர்தான் நதியும் விலகியது
பெட்டி சுமந்த கால்பட்டவுடன்
எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன
ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்
2. தாகோன் விழுந்து நொருங்கியது
வல்லமை இழந்து உடைந்து போனது
சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்
சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்
3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே
நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி
நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்
நிரம்பிடுமே சந்தோஷத்தால்
4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்
மூன்று மாதங்கள் இருந்ததினால்
கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்
உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்
5. பெட்டியை சுமக்க பிரித்தெடுத்தார்
லேவியின் கோத்திரம் தெரிந்தெடுத்தார்
எண்ணில் அடங்கா பலி செலுத்துவோம்
எக்காளம் ஊதிக் கொண்டே முன்னேறுவோம்
Kartharin pettagam thozh melae
Kalvaari naayagan namakule
Sumanthiduvom yesuvin naamam
Solliduvom suvishesham
1. Yordhaan nadhiyum vilagiyathu
Petti sumantha kaal pattaudan
Ericho mathilgal idinthu vizhunthana
Ezhu naal oorvalam vanthathanaal
2. Thaagon vilunthu norungiyathu
Vallamai izhanthu udainthu ponathu
Saathaanin kiriyaimel jeyam edupom
Sarvavallavar petti sumapathaal
3. Valapakkam idapakkam vilagaamale
Nervazhi nadathidum kartharin petti
Nokki paarkum kangal ellam
Nirambidume santhoshathaal
4. Obed edomin uraividathil
Moondru maathangal irunthathanaal
Kartharo veetai aaseervathithaar
Undaana anaithayum perugaseithaar
5. Pettiyai sumakka pirithheduthhaar
Leviyin gothiram therindheduthhaar
Ennil adangga bali seluthuvom
Ekkaalam oodhik konde munneruvom