L o a d i n g
WhatsApp
WhatsApp

80 68

திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
அதை செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை?
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா இயேசையா

தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க எதுவும் எங்களை அசைப்பதில்லை
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா இயேசையா

கதவு திறந்தன கட்டுக்கள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீங்க இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு?
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா இயேசையா

அப்பா உமக்கு நன்றி
ராஜா உமக்கு நன்றி
இயேசு அப்பா

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே (2)
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே (2)
கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் - நான்

எத்தனை ஆண்டுகளோ என் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்
மகராசா இயேசு வந்தீங்க என்னை மகனாய் ஏற்றுக் கொண்டீங்க
மகளாய் ஏற்றுக் கொண்டீங்க
ஆராதனை - 2
உமக்கு ஆராதனை

ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க நான் உம் குரல் கேட்க
ராஜா இயேசு ராஜா 2

செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே

தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் ஆளுகைச் செய்யும்

தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உங்க நதியில் ஒவ்வொரு நாளும் நான் மூழ்கணுமே
ராஜா இயேசு ராஜா 2

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபமாகணுமே தகப்பனே
உலகை மறக்கணுமே தகப்பனே
உங்க குரல் கேட்கணும் நாள் முழுதும் - நானும்

காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் ஜனங்களுக்காய் கதறணுமே
அறுத்து களஞ்சியத்தில் சேர்க்கணுமே - நானும்

தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கிப்போவதில்லை நான் எரிந்துப்போவதில்லை

உமது பார்வையிலே விலையேறப் பெற்றவன் (ள்)நான்
மதிப்புக்குரியவன் நானே
இன்று மகிழ்வுடன் நடனமாடுவேன்
நன்றி ஐயா நன்றி ஐயா

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிக்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
துதிபலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானையா
உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
நீங்க தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கும் நீர்தானையா

வைகறையில் உமக்காக வழிமேல் விழி வைத்து
காத்து நிற்கின்றேன் இறைவா
இந்த காலை நேரம் உமக்காக வழிமேல் விழிவைத்து
காத்து நிற்கின்றேன் இறைவா

யார் என்னை கைவிட்டாலும்
இயேசப்பா கைவிட மாட்டீர்
கைவிடமாட்டீர் கைவிடமாட்டீர்
கைவிடவே மாட்டீர் இயேசப்பா
கைவிடவே மாட்டீர்

தாயும் நீரே தந்தையும் நீரே
தாலாட்டுகிறீர் என்னை சீராட்டுகிறீர்

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்தி செல்வீங்க - எங்களை (3)